திண்டிவனம்: திண்டிவனம் வால்டர் ஸ்கடர் பள்ளி மைதானத்தில் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. திண்டிவனம் விவேக நரேந்திரர் நற்பணிச்சங்கம், ராஜேஸ்வரி கன்னியப்பன் கல்வி மற்றும் விளையாட்டு அறக்கட்டளை, நண்பர்கள் அரிமா சங்கம் சார்பில் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை, யாக குண்டம் அமைத்து வருண பூஜை நடத்தினர். பூஜைகளை அர்ச்சகர்கள் நாகராஜ், கணேசன் செய்தனர். நற்பணி சங்க தலைவர் காமராஜ், நண்பர்கள் அரிமா சங்க தலைவர் ஏகாம்பரம், பொதுமக்கள் பலரும் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.