திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் யாதவ மகா சபை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. மூலவர் லக்ஷ்மி நரசிம்மருக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு, ஏணியில் ஏறி உறியில் தொங்கும் வெண்ணெய் தாழியை எடுக்கும் கோலத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். கோவில் வாசல் உள்பட 4 இடங்களில் உறியடி திருவிழா நடந்தது. விழா ஏற்பாடுகளை திண்டிவனம் யாதவ மகா சபையினர் செய்திருந்தனர்.