பதிவு செய்த நாள்
19
செப்
2014
12:09
துறையூர்: விபூதி பிரசாதம் தரும் பெருமாள் கோவில் என்ற சிறப்பு பெற்ற துறையூர் பெருமாள் மலையில், புரட்டாசி மாத சனி கிழமை, ஐந்து வார உற்சவ விழா, நாளை (20ம் தேதி) துவங்கி அக்டோபர், 18ம் தேதி வரை நடக்கிறது. துறையூர் பெருமாள் மலைக்கோவிலுக்கு, புரட்டாசி மாத உற்சவத்தில் பக்தர்கள் திரளாக வந்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டு செல்வர். கோவில் உற்சவ முதல் வார விழா நாளை, (20ம் தேதி) துவங்குகிறது. இரண்டாவது வாரம், 27ம் தேதியும், மூன்றாவது வாரம் அக்டோபர், 4ம் தேதியும், நான்காவது வாரம், 11ம் தேதியும், ஐந்தாம்வாரம், 18ம் தேதியும் நடக்கிறது. உற்சவ நாட்களில் மூலவர், உற்சவ மூர்த்திகள் வெள்ளி கவசம் சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் மகேந்திர பூபதி மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.