மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடக்கும். இதனை துர்கா பூஜை என்று குறிப்பிடுவர். ஊரில் எங்கு பார்த்தாலும் தோரணங்களும், அலங்காரப் பந்தல்களும் அமைத்துபராசக்தியை வழிபடுவர். இமயத்தில் சிவனோடு வாழும் அம்பிகை, புகுந்த வீட்டில் இருந்து தாய்வீடான வங்கதேசத்திற்கு வருவதாக மக்கள் நம்புகின்றனர். அம்பிகையை வரவேற்க புத்தம் புது ஆடைகளை அணிந்து கொண்டு தங்களை அலங்கரித்துக் கொள்வர். அப்போது பெண்கள் ஆகமனி கான் என்னும் நாட்டுப்புறப்பாடலைப் பாடிஅம்பிகைக்கு வரவேற்பு அளிப்பர். வங்கதேசத்துக்கு வருகை புரியும் அம்பிகையே! உலகைக் காக்கும்பரம்பொருளே! திருமணமாகி இமயமலையில் வாழும் எங்கள் வீட்டுப் பெண்ணே!விநாயகர், கார்த்திகேயன் என்னும் உன் பிள்ளைகளோடு வந்திருக்கும் தேவியே!உன் கணவரான சிவபெருமான் நீ இல்லாமல் இருக்க மாட்டாரே! அதிக நாட்கள் உன்னைப் பிரிந்திருக்க அவரால் முடியாதே! உன்னைவரவேற்பதால் எங்கள் உள்ளம் அளவில்லாத சந்தோஷம் அடைகிறது. உன்னைப் பிரியும் போதோ அது துடிக்கிறது. உன்னை மறுபடியும் தரிசிக்க நாங்கள்ஒரு வருஷம் காத்திருக்க வேண்டுமே! என்னும் பொருள்பட வங்க மொழியில்பாடுகிறார்கள். கோல்கட்டா நகரில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பந்தல்களில் பெரிய துர்காதேவி சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுநடத்தப்படும். நகரம் மட்டுமில்லாமல்கிராமங்களிலும் பூஜை சிறப்பாக இருக்கும். மற்ற நாட்களில், அம்பாளுக்கு ஒருமடங்கு பூஜை செய்தால் போதும் என்றால், நவராத்திரி நாட்களில் ஒன்பது மடங்கு பூஜை செய்ய வேண்டும் என்பது இங்கு ஐதீகம். இதனால், இரவும் பகலுமாக தொடர்ந்து பூஜை நடந்து கொண்டேஇருக்கும்.