பதிவு செய்த நாள்
23
செப்
2014
02:09
திருப்பதி :திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய, தலைமுடி மூலம், 63 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என, தேவஸ்தான இணை செயல் அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தார். திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை, ரகம் வாரியாக தரம் பிரித்து, இணையதள ஏலம் மூலம், தேவஸ்தானம் விற்று வருகிறது. இந்த வகையில், தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு சுமார், 200 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.சமீபத்தில் நடந்த இணையதள ஏலத்தில், 1.62 லட்சம் கிலோ தலைமுடியை விற்றதில், 63 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக, தேவஸ்தான இணை செயல் அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தார்.