சிவனுக்கு முக்கண் இருப்பதைப் போல், சக்தியின் அம்சமான காளிக்கும் முக்கண் இருக்கிறது. திருநெல்வேலி அருகிலுள்ள வல்லநாடு தம்பிராட்டி காளி கோயிலில் அம்பிகை மூன்று கண்களுடன் காட்சி தருகிறாள். சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் இவளுக்கு, சிவப்பு புடவை சாத்தி வழிபட்டால் புத்திர, திருமண தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.