குன்னூர் : குன்னூரில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா துவங்கியது. குன்னூர் மாடல்ஹவுஸ் ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றத்தில், நேற்று முன்தினம் நவராத்திரி விழா சிறப்பு பூஜைகளுடன், துவங்கியது. தினமும் மாலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 743 கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. வரும் 2ம் தேதி நடக்கும் இந்த விழாவில், குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மன்ற தலைவி பிரபாவதி, உறுப்பினர்கள் ஜெயலட்சுமி, சாந்தி, இந்து ஆகியோர் செய்திருந்தனர். குன்னூர் சவுடேஸ்வரியம்மன் கோவிலில், தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில், சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல தந்திமாரியம்மன் கோவில், வனதுர்கையம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், முத்தாலம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.