நவராத்திரி நாளில் தேவிக்குரிய பாடல்களைப் பாடுவது சிறப்பு. அதிலும் நிறைவுநாளான விஜயதசமியன்று பாடுவது பன்மடங்கு புண்ணியத்தையும், லாபத்தையும் கொடுக்கும். லலிதா சகஸ்ரநாமம், திரிசதி, தேவி பாகவதம், சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சரஸ்வதி அந்தாதி, சரஸ்வதி அஷ்டோத்திரம், லட்சுமி அஷ்டோத்திரம், துர்கா அஷ்டோத்திரம், தேவி மகாத்மியம், துர்கா ஸப்தஸதி போன்றவற்றில் முடிந்தவற்றை படிக்கலாம். இதனால், குடும்பத்தில் கல்வி, செல்வம், வீரம் அதிகரிக்கும். விஜயதசமி நாளில் கலைகளை பயிலத்தொடங்குவது சிறப்பு. வீணை, மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளை சரஸ்வதி சந்நிதி முன்னர் இசைத்து வழிபடுவர்.