திருப்பதி பிரம்மோற்சவ கருட சேவையை முன்னிட்டு, குடியிருப்பு சங்கம் சார்பில், எம்.கே.பி., நகரில் கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. திருப்பதி பி ரம்மோற்சவ கருட சேவைக்கு செல்ல முடியாதவர்களுக்காக, ஆண்டுதோறும், எம்.கே.பி., நகர் ஆர்டிசான் குடியிருப்போர் பொது நலச்சங்கத்தின் ஆன்மிக திருப்பணி குழு சார்பில், கடந்த, 27 ஆண்டுகளாக, எம்.கே.பி. நகரில் கருடசேவை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 28ம் ஆண்டாக நேற்று, எம். கே.பி., நகர் 3வது பிரதான சாலையில் நடந்த கருட சேவை நிகழ்ச்சி யில், உற்சவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். சுப்ரபாத ÷ சவையுடன், காலை 9:00 மணிக்கு துவங்கி, இரவு 9:00 மணி வரை சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடந்தன.