பதிவு செய்த நாள்
01
அக்
2014
12:10
திருவள்ளூர் : திருவள்ளூர், பவானி அம்மன் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, 6ம் நாளான நேற்று முன்தினம், அம்மன் வாஸ்து லட்சுமி மற்றும் சந்தான லட்சுமி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர், ராஜாஜிபுரம், காளமேகம் தெருவில், பவானி அம்மன் கோவில், அங்கார பரமேஸ்வர அம்மன் கோவில் உள்ளது. இங்கு, நவராத்திரி விழா, கடந்த, 23ம் தேதி துவங்கியது. தினசரி அம்மனுக்கு பல்வேறு அலங்கார அபிஷேகம் நடக்கிறது. 6ம் நாளான, நேற்று முன்தினம், வாஸ்து அலங்காரம் மற்றும் சந்தான லட்சுமி அலங்காரத்தில் உற்சவம் மற்றும் மூலவர் அம்மன் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசித்துச் சென்றனர்.ஏழாம் நாளான நேற்று, வாமன மூர்த்தி அலங்காரத்திலும், சீதாலட்சுமி சமேத ராமர் அலங்காரத்திலும் எழுந்தருளினார். 8ம் நாளான இன்று, மும்மூர்த்தி மற்றும் கனகதுர்க்கை அலங்காரம் நடைபெற உள்ளது.