பதிவு செய்த நாள்
01
அக்
2014
12:10
திருப்பாச்சூர் : திருப்பாச்சூர் அருகே, சாய்பாபா கோவிலில், வரும் 3ம் தேதி, விஜயதசமியை முன்னிட்டு, 108 பால்குட அபிஷேகம் நடைபெறுகிறது. திருப்பாச்சூர் அடுத்த, வேடங்கிநல்லுார் கிராமத்தில், ராம் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், வரும் 3ம் தேதி, விஜயதசமி அன்று, சாய்பாபாவின், 96வது மகா சமாதி நாளை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.அன்று காலை 5:00 மணிக்கு காகட ஆரத்தியும், 6:00 மணிக்கு குருஸ்தானம் பூஜையும் நடைபெறும். அதன்பின், காலை 8:00 மணிக்கு 108 பால்குட அபிஷேகமும், பகல் 12:00 மணிக்கு மத்யான ஆரத்தியும் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், 6:30 மணிக்கு பல்லக்கு ஊர்வலமும், இரவு 9:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடைபெறும்.