பதிவு செய்த நாள்
01
அக்
2014
12:10
உளுந்துார்பேட்டை: பரிக்கல் கோவிலில் ஜெ., மீண்டும் முதல்வராக வேண்டி ஜெ., பேரவை சார்பில் கூட்டு பிரார்த்னை நடந்தது. விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஜெ., மீண்டும் முதல்வராக வேண்டி கூட்டு பிராத்தனை வழிபாடு நடந்தது. நிகழ்ச்சிக்கு ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார்.மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா முன்னிலை வகித்தார். மாவட்ட பேரவை தலைவர் அழகுவேல், இணை செயலாளர்கள் அசோகன், முருகானந்தம், பொருளாளர் பழனிமலை, மாணவரணி மாவட்ட செயலாளர் பழனி, தொகுதி செயலாளர் சேகர், இணை செயலாளர் நாராயணசாமி, ஒன்றிய அவை தலைவர் வேலாயுதம், எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் வேம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.