பதிவு செய்த நாள்
01
அக்
2014
12:10
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த நவராத்திரி விழாவில், நேற்று உமா மகேஸ்வரர் அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கடந்த, 24ம் தேதி விழா துவங்கியது. அன்று முதல் நிகழ்ச்சியாக, அம்பாள் சிவதபசு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை, அகமதாபாத் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார். கடந்த, 25ம் தேதி முருகன் அலங்காரத்திலும், 26ம் தேதி சேஷ சயனம் அலங்காரத்திலும், 27ம் தேதி துர்கா பரமேஸ்வரி அலங்காரத்திலும், 28ம் தேதி லக்ஷ்மி தேவி அலங்காரத்திலும் அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் செய்தனர். நேற்று, 30ம் தேதி உமா மகேஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை அன்னபூரணம் செய்திருந்தார். இன்று அக்டோபர், 1ம் தேதி மகா விஷ்ணு அலங்காரம், நாளை, (2ம் தேதி) சரஸ்வதி அம்மன் அலங்காரம், 3ம் தேதி சந்திர சேகர ஸ்வாமி அமராவதி ஆற்றுக்கு புறப்பாடாகி அம்பு போடுதல், மகர நோம்புச் சாவடியில் மண்டகபடி நடக்கிறது. 4ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. உற்சவ நாட்களில் காலை, 8 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும், இரவு, 7.30 மணிக்கு அம்பாளுக்கு தீபாராதனையும் நடக்கிறது.