பந்தலூர் : நவராத்திரியை முன்னிட்டு, பந்தலூர் முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அர்ச்சகர் சிவலிங்கம் தலைமையில் கொலுவைக்கப்பட்டு நடத்தப்படும் பூஜையில், காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அர்ச்சனை நடக்கிறது. மேலும், 3ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு, காலை 9:00 மணி முதல் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் மற்றும் கல்வி வேள்வி நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.