பதிவு செய்த நாள்
04
அக்
2014
02:10
தர்மபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பத்மசாலியர் மடத்தில், வெங்கடரமணசாமி கோவிலில், புரட்டாசி திருவிழா இன்று நடக்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி பஞ்சாயத்தை சேர்ந்த ஒகேனக்கல் பத்மசாலியர் மடத்தில், வெங்கடரமணசாமி கோவிலில், வருடாந்திர புரட்டாசி திருவிழா இன்று நடக்க உள்ளது. முன்னதாக, நேற்றிரவு கங்கை பூஜை நடந்தது. தொடர்ந்து, இன்று காலை, 7 மணிக்கு, காவிரி ஆற்றில் புனித தீர்த்தம் கொண்டு, நிகழ்ச்சி நடக்கிறது. இதனை தொடர்ந்து, பொங்கலிடுதல், அபிஷேகம் செய்தல், மொட்டை அடித்தல், காது குத்தல், மலர் அலங்காரம் செய்தல் நடக்கிறது. விழாவில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர். வெங்கடரமணசாமி கோவில் தேவஸ்தான மண்டப அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.