கண்டாச்சிபுரம் அடுத்த மடவிளாகம் பகுதியில் உள்ள திருவேங்கடப் பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா நடந்தது. கண்டாச்சிபுரம் சார்ந்த மடவிளாகம் பகுதியில் அமைந்துள்ள திருவேங்கடப் பெருமாள் கோவிலில் முதலாம் ஆண்டு தேர்த் திருவிழா நடந்தது. முன்னதாக காலை மூலவர் வேங்கடப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மதியம் 12 மணியளவில் கண்டாச்சிபுரம் ஊராட்சி தலைவர் கண்ணாயிரம் வடம் பிடித்து தேர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.