திருப்பதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, புதிதாக பொறுப்பேற்றுள்ள எச்,எல்.தத்து, நேற்று திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்தார். அவரின் மனைவி காயத்ரியும் உடன் வந்திருந்தார். வழிபாடு முடிந்தபின், தலைமை நீதிபதிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.