பதிவு செய்த நாள்
04
அக்
2014
02:10
ஈரோடு: உலக மக்கள் ஆன்ம லாபம் பெறவும், மழை பெய்து அனைத்து உயிர்களும், இன்புற்று வாழவும் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற உள்ளது. ஈரோடு, கோட்டை, மேற்கு அனுமந்தராயன் கோவில் வீதியில் உள்ள அப்பர்சாமி மடத்தில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் வள்ளலாரின், 192ம் ஆண்டு பிறந்த நாள் விழா, ஈரோடு சங்கத்தின், 75ம் ஆண்டு விழா, ஈரோடு தரும சாலையின், 25ம் ஆண்டு விழா என, முப்பெரும் விழா, நாளை (5ம் தேதி) நடக்கிறது. அன்று காலை, ஆறு மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணமும், எட்டு மணிக்கு சன்மார்க்க சங்க கொடியேற்றும் நிகழ்ச்சி, 8.30 மணிக்கும், மதியம், 1.30 மணிக்கும் அன்னதானமும் நடக்கிறது. காலை, 10 மணிக்கு கருத்தரங்கம் நடக்கிறது. மாலை, நான்கு மணிக்கு, ஈரோடு மாவட்ட அரசு இசை பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி, ஆறு மணிக்கு வள்ளலார் ஆன்மீக பல்கலைக்கழகம் என்ற தலைப்பில், சொற்பொழிவு நடக்கிறது. பல்வேறு தரப்பினரின் உதவி மூலம், அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.