விழுப்புரம்: பானாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன், காளியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு ÷ ரணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. நிறைவு விழாவான விஜயதசமி தினத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை 4 மணிக்கு மூலவர் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து, காளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.