சோமவார பிரதோஷம்: இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2014 04:10
மதுரை: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது. இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை.
அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது. இன்று சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.