விருதுநகர்: அருப்புக்கோட்டை காளையார்கரிசல்குளம் வலம்பிறை காமாட்சியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா நேற்று மாலை 6 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. அனுக்ஞை, மகா சங்கல்பம், விநாயகர் பூஜை, கும்ப பூஜை, பூர்ணாகுதி, அலங்கார தீபாராதனை, இரவு 7 மணிக்கு முளைப்பாரி எடுத்தல் நடந்தது. இன்று (அக்.,7) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வலம்பிறை காமாட்சியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகம் நடக்கிறது. அலங்கார தீபாராதனைக்குப்பின் பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு முளைப்பாரி செலுத்துதல், திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகக்குழுவினர் செய்தனர்.