பதிவு செய்த நாள்
07
அக்
2014
02:10
பெரிய கோயில் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது தஞ்சை பெரிய கோயில் தான். ஆனால், மற்றொரு பெரிய கோயிலும்தமிழகத்தில் இருக்கிறது. அதுவே, கும்பகோணம் அருகிலுள்ளதிருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில். திருக்கயிலாயத்தை விட உயர்ந்த இந்ததிருத்தலத்தைத்தரிசிப்போமா!
சிறப்பம்சம்: திருஞானசம்பந்தர், அப்பர்,சுந்தரரால் பாடல் பெற்ற தலம் இது. இங்குள்ள ஈசன் கோடீஸ்வரர் என்ற பெயரில் சுயம்புமூர்த்தியாகவும், அம்பாள் திரிபுரசுந்தரி என்றதிருநாமத்துடனும்அருள்பாலித்துவருகின்றனர். இத்தல ஈசன் சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்தோடுகாண்போரைக் கவரும் வண்ணம் வீற்றிருக்கிறார். இங்குள்ள கரையேற்று விநாயகரை சதுர்த்தி நாளில் வழிபட்டால் நம் குறைகள் யாவும் களைந்து நல்ல வண்ணம் வாழ வைப்பார். இம்மையிலும்,மறுமையிலும்பக்தர்களைக்கரையேற்றுபவர்என்பதால் இவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.
பால சனீஸ்வரர்: இங்கு ஜேஷ்டாதேவி, பால சனீஸ்வரர், துர்வாசர்ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. சனி பகவான், எமன் ஆகியோரும்,சித்ரகுப்தர், துர்வாசமகரிஷியும் எதிரெதிர்சந்நிதிகளில்வீற்றிருக்கிறார்கள்.பால சனியின் தலையில்சிவலிங்கம் உள்ளது.காக வாகனத்திற்கு பதில்கருட வாகனம் இருக்கிறது. மூலவரின் கருவறைவெளிச்சுவரில் சிறப்புமிக்க, அழகோவிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கூத்தபிரான்எனப்படும் நடராஜர், சிவகாமி அம்பாளுடன் இருக்கிறார். அவரது வலதுபுறம் பேய்உருவில் காரைக்கால்அம்மையார் தாளமிட்டபடி இருந்து ஈசனின்திருநடனத்தைக் கண்டு ஆனந்தமடையும் சிற்பம் அனைவரையும் கவரக்கூடியது. முப்பத்து முக்கோடி தேவர்களும் வழிபட்டு பேறுபெற்றதும், தங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றதுமான தலம் இது. இதனால், இது பெரியகோயில் என்ற அந்தஸ்தைப் பெற்றது.
தல வரலாறு: தன் கணவனைக் கொன்று விட்டு,விலை மாதாக வாழ்ந்த லோககாந்தா என்ற பெண், தன்னுடைய இறுதி காலத்தில் இந்த தலத்திற்கு வந்தாள். அவள் மரணமடைந்ததும்எம துõதர்கள் அங்கு வந்தனர். அதற்குள் சிவ துõதர்கள் சென்று அந்தப் பெண்ணை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். எமன்சிவபெருமானிடம் காரணம் கேட்டான். அதற்குசிவபெருமான்,திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து என்னைதரிசிப்பவர்களை அண்ட உனக்கு உரிமையில்லை என்றார். காசியைப் போலஇந்த தலத்தில்வாழ்பவர்களுக்கும் எமபயம் இல்லை. காசியை விட ஈசனின் அருள்மிகுந்த உள்ள தலம் இது.