உடுமலை : உடுமலை தில்லை நகரில் உள்ள ஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவிலில், நவராத்திரி விழா மற்றும் சாய்பாபா மகா சமாதி நாள் விழா நடந்தது.ஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய் அறக்கட்டளை தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு அறக்கட்டளை சார்பில், நோட்டு புத்தகங்கள், வழங்கப்பட்டன.