Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எப்படி தெரிந்தது இவருக்கு? மகான் ... கங்கா ஸ்நானம் ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அமைதியை நெஞ்சினில் பூட்டி வைப்போம்..
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2014
02:10

நினைப்பில் உண்மையும், சொல்லில் இனிமையும் மனித வாழ்வுக்கு அவசியமானவை.  நம்மை வழி நடத்தும் ஆன்மிக ஒளி, நமக்கு எப்போதும் வழிகாட்டி துணை செய்கிறது.  கடவுள் மனிதனுக்குள்ளே இருப்பதால் தான், அவன் தெய்வீக வாழ்வை நோக்கி முன்னேற முயற்சிக்கிறான்.  சில நேரங்களில் ஒரு தனி மனிதரின் வாழ்க்கை பூமியின் விதியையே நிர்ணயிக்கிறது.  கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருங்கள். அதை விடப் பெருமை மிக்க விஷயம் வேறில்லை.  நல்ல செயல்களை தள்ளிப் போடுவது கூடாது. செய்ய எண்ணினால் உடனடியாக செயல்படுத்தி விடுங்கள்.  இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது சரியானது அல்ல. உறக்கத்தைத் தடுப்பதால் உடல்நிலை பலவீனமாகி விடும்.  அழிவு மனிதனை தாக்கும் போது, மகத்தான சிருஷ்டியும் வரப்போகிறது என எண்ண வேண்டும்.  பிறருக்காக வாழும் பொதுநலப்பண்புடன் இருப்பதே உயர்ந்த வாழ்வு.   மனதில் ஆசை, பற்று, அகங்காரம் இவை எதுவுமே இல்லாமல் செயலாற்ற முயலுங்கள்.   தவறான செயல்களைச் செய்ய நேரும் போது குறைகளை ஒப்புக் கொண்டு அதிலிருந்து விலகுவதே நன்மையளிக்கும்.  கட்டுப்பாடாக வாழ்வது என்பது,சுதந்திரத்திற்கு முரண்பட்ட விஷயம் அல்ல.  உண்மையில் பிரச்னை நமக்குள் இருக்கிறது. ஆனால், அது சுற்றுப்புறத்தில் இருந்து வருவதாக தவறாக எண்ணுகிறோம்.   எந்தச் சூழ்நிலையிலும் மனதிற்குள் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். அப்போது ஆனந்தம் என்னும் தீபம் நம் உள்ளத்தில் தெரியும்.  கடமையைச் சரிவரச் செய்யுங்கள். ஆனால், பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் விழிப்புணர்வோடு இருங்கள்.  சிறந்த நண்பன் கடவுள் ஒருவர் மட்டுமே. எதைச் செய்தால் நமக்கு நல்லது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.  நல்ல லட்சியங்களைத்  தேர்ந்தெடுத்து அதற்கான பணியில் எப்போது ஈடுபடுங்கள். இதற்காகத்தான், கடவுள் நம்மை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.  மனதைத் துõய்மையாக்கும் பணியை கடவுளிடம் விட்டு விடுங்கள். அதைச் சரிவரச் செய்து நம்மை வழிநடத்துவது அவர் பொறுப்பு.  நம்முடைய ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும் கடவுளுக்கு அர்ப்பணிக்கும் காணிக்கையாக இருக்கட்டும்.  சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்து விட அனுமதிக்காதீர்கள். அதிலிருந்து விலகி நின்று அதற்கான மூல காரணத்தை விலக்குங்கள்.  கடவுளின் அருளாட்சியில் தீமை என்பதே சிறிதும் கிடையாது. எல்லாம் ஒரு நன்மையைக் கருதித் தான் உலகத்தில் நடக்கிறது.  ஒழுக்கம் தான் ஆனந்தமாளிகையின் திறவுகோல். பயனற்றதும், பொருளற்றதுமான வறட்டு வேதாந்த விஷயங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.  கடவுளின் பார்வையில் பாரபட்சம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் சமநோக்குடனே அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மகான் அரவிந்தர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar