பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த குளத்துப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூமிநீளா சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் மகோற்சவ விழா நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு கடந்த 12ம் தேதி முதல் அஷ்டாச்சர மந்திரம் ஜபம், ேஹாமம் நடைபெற்று வருகிறது. வரும் 17ம் ÷ ததியன்று மாலை 4.45 மணி முதல் பகவத் அனுக்ஞை, புண்யாவசனம், சாற்றுமறை நடைபெறும். தொடர்ந்து 18 ம் தேதி காலை 7.00 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூபம், ஹாமங்கள், மகாபூர்ணாகுதி நடைபெறும். அடுத்து 10.00 மணிக்கு கலச ஸ்பந்தன திருமஞ்சனம், 11.30 மணிக்கு உபந்ய õசம், மதியம் 1.00 மணிக்கு திருவாராதனம், சேவாகாலம், நிவேதனம், சாற்றுமறை நடைபெறும். இங்கு ேஹாமங்கள் நடைபெறும் நாளில் சுதர்சன சதகம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் நடைபெறும்; அஷ்டாச்சர மந்திரம் ஒரு லட்சம் ஆவர்த்தி செய்யப்படும். இத்தகவலை கோவிலின் தர்மகர்த்தா தெரிவித்தார்.