கோம்பை: கோம்பை மற்றும் சுற்றுக்கிராம விவசாயிகள் 18ம் கால்வாயில் வரும் தண்ணீரை வைத்து சாகுபடி செய்து வருகின்றனர்.தொடர்ந்து நான்காவது ஆண்டாக மழை இல்லாததால், இந்த ஆண்டும் வறட்சி நிலவுகிறது. எனவே மழை வேண்டி கன்னிமார் புதுக்குளம், கருப்பணசாமி, கன்னிமார்கோயிலில் விவசாயிகள் கிடா வெட்டி அன்னதானம் செய்தனர். ஏராளமான விவசாயிகள் வழிபாடு நடத்தி அன்னதானம் செய்தனர்.