பதிவு செய்த நாள்
16
அக்
2014
12:10
பழநி : பழநி கோயில் உண்டியலில், 27 நாட்களில் ஒரு கோடியே 30 லட்சத்து 18 ஆயிரத்தி 410 ரூபாய் காணிக்கையாக கிடைத்து உள்ளது.பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் ரொக்கமாக ஒரு கோடியே 30 லட்சத்து 18 ஆயிரத்து 410 ரூபாயும், தங்கம் 670 கிராம், வெள்ளி 6 ஆயிரத்து 200 கிராம், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் கரன்சி 436 காணிக்கையாக கிடைத்துள்ளது. இது தவிர, தங்க திருமாங்கல்யம், வேல், செயின், வளையல், தகடுகள் மற்றும் வெள்ளி மோதிரம், பேனா, நாணயம், வேல், பாதம், கொலுசு, வீடு உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோயில் இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ் உடனிருந்தனர்.