வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்மவழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப்பொருள்களை வழங்கி மகிழ்ந்தான். தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்துஉபசரித்து நன்றி தெரிவித்தாள். இதனடிப்படையில் வடமாநிலங்களில் சகோதரிகளுக்கு தீபாவளிஅன்று சகோதரர்கள் பரிசளிப்பர்.பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதைசெய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை நதி நீரில் மிதக்க விடுவார்கள். தீபங்கள் நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் கவனமாக பார்த்துக் கொள்வர். தீபங்கள் பிரகாசிப்பது போல வாழ்வும் பிரகாசமாக அமைய வேண்டும் என்று அப்போது பிரார்த்தித்துக் கொள்வர்.