Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண்களின் பாதுகாப்புக்கு கந்தசஷ்டி ... உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கங்கா ஸ்நானம் செய்ய ஒரு வருஷம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2014
09:10

காஞ்சிப்பெரியவர் 1932ல் ராமேஸ்வரம் வந்தார். கடலில் ஸ்நானம் செய்த அவர் சிறிதளவு மணலைச் சேகரித்துக் கொண்டார். அதை அலகாபாத்திலுள்ள பிரயாகை திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அது மட்டுமல்ல! தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர் மாதத்தில் காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்யவும் அவர் முடிவெடுத்திருந்தார். இதற்காக, அவர் வாகனங்கள் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. நடந்தே செல்ல திட்டமிட்டார். அப்போது பெரியவருக்கு வயது 39 தான்.இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, தென்காசியைச் சேர்ந்த அனந்த கிருஷ்ண சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் முன்னதாகவே காசிக்கு நடந்தே புறப்பட்டார். எந்தெந்த ஊர்களில் பெரியவர் தங்கிச் செல்ல வேண்டும் என்பதை செல்லும் வழியில் குறித்துக் கொண்டார். அவ்வாறு அவர் நடந்து செல்ல ஆறு மாதங்கள் பிடித்தன.அவர் திரும்பி வந்து பயணத்திட்டத்தை பெரியவரிடம் அளித்தார். பெரியவரும் சிஷ்யர்களும் 1933 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தஞ்சாவூரிலிருந்து பயணத்தைத் துவக்கினர். செல்லும் வழியில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெரியவர் தங்கினார். அங்கெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து ஆசி பெற்றனர். அனந்தசர்மா வேகமாகச் சென்று திரும்பியதால் ஆறுமாதங்கள் தான் பிடித்தன. ஆனால், மகாபெரியவர் பல ஊர்களில் தங்கியதால், பிரயாகையை அடைய 1934 ஜூலை 23ம் தேதி ஆகி விட்டது. அங்கு தான் கொண்டு சென்ற ராமேஸ்வரம் மணலை, திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பித்தார். அங்கேயே செப்டம்பர் மாதம் வரை தங்கி விட்டார். செப்டம்பர் இறுதியில் காசி கிளம்பினார்.அவரிடம் பக்தர்கள்,இப்போதே நீங்கள் வெகு துõரம் நடந்து வந்து விட்டீர்கள். இனியும் நடக்க வேண்டாம். சாலை வசதி நன்றாக இருக்கிறது. வாகனத்தில் வாருங்கள், என கோரிக்கை வைத்தனர். மகாபெரியவர் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து நடந்தே காசியாத்திரையைத் தொடர்ந்தார். பிரயாகையில் இருந்த பக்தர்கள் பலரும் அவருடன் சென்றனர். அக்டோபர் 3ம் தேதி காசி எல்லையை அடைந்த சுவாமிகளை காசி மகாராஜா உள்ளிட்டோர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.வரவேற்பு விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அக்டோபர் 7ல் மகாபெரியவர் கங்கையிலுள்ள மணிகர்ணிகை உள்ளிட்ட தீர்த்தக்கட்டங்களில் தீர்த்தமாடினார். பண்டித மதன்மோகன் மாளவியாவின் அழைப்பை ஏற்று காசி இந்து சர்வகலாசாலையில் (பல்கலைக்கழகம்) உரையாற்றினார். ஒவ்வொரு இந்துவும் வாழ்வில் ஒரு முறையேனும் காசி யாத்திரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். நாமும் மகாபெரியவர் ஆசியுடன், அடுத்த தீபாவளிக்குள் ஒருமுறை காசி யாத்திரை சென்று திரும்புவோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar