Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ... பந்தலூர் மாரியம்மன் கோவில் திருவிழா; பூகுண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் பந்தலூர் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூர் தந்தி மாரியம்மன் திருவிழா சிம்ம வாகனத்தில் அம்மன் பவனி
எழுத்தின் அளவு:
குன்னூர் தந்தி மாரியம்மன் திருவிழா சிம்ம வாகனத்தில் அம்மன் பவனி

பதிவு செய்த நாள்

05 மே
2024
02:05

குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 5ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. இதில், இன்று தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சார்பில் சித்திரை தேர் ஊர்வலம் நடந்தது. சிறப்பு விருந்தினராக அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் சமூக தலைவர் ஜான் பாண்டியன் பங்கேற்றார். குன்னூர் சுப்பிரமணியர் கோவிலில் இருந்து, மேள தாளங்கள் முழங்க, பறவை காவடி, தீர்த்த குட ஊர்வலத்துடன் துவங்கிய திருத்தேர் ஊர்வலம் மவுன்ட் ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது.

அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார். இதில் பறவை காவடி மற்றும் அக்னி சட்டி ஏந்தியும் அழகு குத்தியும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். கருப்பராயர், வெங்கடாசலபதி, அம்மன் கடவுள் வேடமிட்டு பலரும் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். மதுரை வீரன் வேடமடைந்தவர் குதிரையின் மீது அமர்ந்து ஊர்வலத்தில் வந்தார். விநாயகர் கோவில் மண்டபத்தில் அன்னதானம், கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஆடல் பாடல்களுடன் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar