Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூர் தந்தி மாரியம்மன் திருவிழா ... மழை வேண்டி மேளதாளத்துடன் கழுதைகளுக்கு திருமணம் மழை வேண்டி மேளதாளத்துடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தலூர் மாரியம்மன் கோவில் திருவிழா; பூகுண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பந்தலூர் மாரியம்மன் கோவில் திருவிழா; பூகுண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

05 மே
2024
02:05

பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 34 ஆம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 2-ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 3-ம் தேதி காலை சிறப்பு பூஜைகள் மற்றும் கோவில் கமிட்டி தலைவர் பிரபாகரன் தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சியும், தொடர்ந்து காப்பு கட்டுதல், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது.

4-ம் தேதி காலை அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜைகள் நடந்ததுடன், ஆற்றங்கரைக்கு சென்று பறவை காவடி, பால் காவடி, வேல் பூட்டியும், பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பூகுண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

அன்னதான நிகழ்ச்சியும், மாலை தேர் ஊர்வலமும் நடைபெற்றது. ஊர்வலத்தில் செண்டை மேளம், தப்பாட்டம், பேண்ட் வாத்தியம் இடம்பெற்றதுடன் வானவேடிக்கை நடத்தப்பட்டது. இன்று காலை முத்து மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு ஆற்றங்கரைக்கு சென்று நீர் வெட்டுதல் மற்றும் மாவிளக்கு பூஜையும் தொடர்ந்து அம்மன் திருக்கரகங்கள் பக்தர்களின் வீடுகளுக்கு சென்று அருளாசி வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெற்றது. பூஜைகளை அர்ச்சகர்கள் மணிகண்டன், கார்த்திகேயன், மோகன் மற்றும் சண்முகம் தலைமையிலான குழுவினர் செய்தனர்.

சிறப்பாக நடைபெற்ற விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் பிரபாகரன், செயலாளர் சிவமயம், பொருளாளர் துரைரத்தினம், ஆலோசகர் கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், சந்தானம், யசோதரவாசன், முருகையா உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் மற்றும் விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar