Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளியன்று மட்டும் திறக்கும் ... மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.,24 முதல் கந்தசஷ்டி உற்சவம்! மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.,24 முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்திமதிஅம்மனுக்கு நெல்லையப்பர் காட்சி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 அக்
2014
10:10

திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நேற்று காந்திமதி அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 10ம் தேதி காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலையிலும், இரவிலும் காந்திமதி அம்பாள் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் வீதியுலா நடந்தது. காந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து தங்க முலாம் சப்பரத்தில் அம்பாள் புறப்பட்டு கம்பை நதி காமாட்சி அம்மன் கோயிலை சென்றடைந்தார். ஐப்பசி திருவிழாவில் காட்சி திருநாளான நேற்று அம்மன் சன்னதி வாசலில் பெருமாள், திருஞான சம்பந்தர் கோயில் முன் ஞான சம்பந்தருக்கும், சந்திவிநாயகர் சன்னதி முன் அகஸ்தியருக்கும், கம்பை நதியில் விஸ்வேஸ்வர லிங்கமாகவும், ஜலமாகவும் நெல்லையப்பர் காட்சி தந்தார். காட்சி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காட்சி வைபவத்தை முன்னிட்டு அம்பாளுக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நான்கு ரதவீதிகளிலும் சுவாமி அம்பாள் வீதியுலா நடந்தது. திருக்கல்யாண திருவிழா அம்மன் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் இன்று 21ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு 4.30 மணிக்குள் திருக்கல்யாண திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் பட்டண பிரவேசம் வீதியுலா நடக்கிறது.21ம் தேதி முதல் 24ம் தேதி வரை அம்பாள் கோயில் ஊஞ்சசல் மண்டபத்தில்அம்பாள் ஊஞ்சல் விழாவும், 3ம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar