பதிவு செய்த நாள்
23
அக்
2014
01:10
வால்பாறை : வால்பாறை நடந்த பிரதோஷபூஜையில், சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, பிரதோஷபூஜையையொட்டி, நேற்றுமுன்தினம் மாலை 5.00 மணிக்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிேஷக பூஜைகள் நடந்தன. பின்னர் மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நேற்றுமுன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே நேரத்தில் பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு, திருநீறு போனறவைகளால் அபிசேக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கும் பூக்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கும், பெரிய களந்தை ஆதிஸ்வரன், தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலங்கண்டர், கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில் போன்ற கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.