சபரிமலையில் மண்டல காலம் தொடங்க இன்னும் 24 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பக்தர்களுக்கு வசதிகள் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீசனில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தரிசனம் செய்ய சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடக்கும் பூஜை மண்டலகாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மண்டல காலம் வரும் நவ., 17ல் தொடங்குகிறது. இதற்காக 16 மாஙை 5.30 க்கு நடை திறக்கிறது. அன்று மாலை புதிய மேல் சாந்திகள் சபரிமலை கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, மாளிகைப்புறம் கேசவன்நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொள்வர். அன்று வேறு எந்த விசேஷபூஜைகளும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நவ., 17 அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்திகள் நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். 41 நாட்கள் தொடர்ச்சியாக இந்த பூஜைகள் நடைபெறும்.