பதிவு செய்த நாள்
23
அக்
2014
02:10
திருத்தணி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நாளை (23ம் தேதி) வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.திருத்தணி, பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நாளை, வரலட்சுமி நோன்பு நடக்கிறது. விழாவை ஓட்டி, 108 பெண்கள் பால்குட ஊர்வலம் நடக்கிறது.தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகின்றன. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து,பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.