அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை, கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அவலூர்பேட்டை , கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவில்களில் தீபாவளியை முன்னிட்டு காலையில் அர்ச்சனை வழிபாடு நடந்தது. முன்னதாக சுவாமிக்கு திருமஞ்சனம், சிறப்பு தீபாரதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பூதேவி, சீதேவி சமேத வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது.