Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராசிபுரம் மாரியம்மன் கோவில் ... ஈரோடு கோவில்களில் பக்தர்கள் கூட்டம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலில் நாளை கந்த சஷ்டி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2014
02:10

சென்னிமலை: சென்னிமலை மலை மீது கோவில் கொண்டுள்ள சுப்பிரமணியஸ்வாமி கோவிலில், ஆண்டுதோறும் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். இவ்விழா, நாளை (24ம் தேதி) துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.

"காக்க காக்க என துவங்கும் கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலம், சென்னிமலை மலை கோவிலாகும். 3,000 ஆண்டு பழமை வாய்ந்த திருத்தலம். 18 சித்தர்களுள் ஒருவரான பின்நாக்குச்சித்தர் வாழ்ந்து, முக்தியடைந்த திருத்தலம். முருகப்பெருமானுக்கு உரிய, 16 திருமூர்த்தங்களும், இக்கோவிலில் காணப்படுவது தனிச்சிறப்பு. இங்கு, நாளை (24ம் தேதி) காலை, 8 மணிக்கு, கந்த சஷ்டி விழா துவங்குகிறது. அன்று காலை, 8 மணிக்கு, சென்னிமலை கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து, முருகன் வள்ளி தெய்வானை சமேதராக, உற்சவமூர்த்தி புறப்பாடு துவங்கி, மலை கோவிலை அடையும். காலை, 9.30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கி, 10.30 மணிக்கு மகா பூர்ணாகுதியும், 11 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம், 12 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மதியம், 12.30 மணிக்கு வள்ளி தெய்வானைக்கு அபிஷேம் நடைபெறும். ஒரு மணிக்கு அன்னதான விழா நடக்கிறது.

இந்த அபிஷேகம் மற்றும் அன்னதானம், வரும், 29ம் தேதி வரை நடக்கும். 29ம் தேதி இரவு, உற்சவர் மலை அடிவாரத்தில் எழுந்தருளி இரவு, 8 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா, சென்னிமலை நான்கு ரத வீதிகளில் நடக்கிறது. இதில், மேற்கு ரத வீதியில், ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ரத வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ரத வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்ச்சி முடிந்து, முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் எழுந்தருள்வார். தொடர்ந்து, 30ம் தேதி காலை, 11 மணிக்கு முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்யும் திருமண விழா நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை, செங்குந்தர் கைக்கோள முதலியார் ஸ்ரீகந்த சஷ்டி விழாக் கமிட்டியார், மற்றும் கோவில் செயல் அலுவலர் ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, 24 முதல், 29ம் தேதி வரை, ஐந்து நாட்களும், தினமும் காலை, 9 மணிக்கு மலை கோவிலுக்கு செல்ல, பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவில் காப்பு கட்டி, சிறப்பு விரதம் இருப்பவர்கள், விழா ஏற்பாட்டாளர் விஸ்வநாதனிடம், 99656 22442 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar