ஈரோடு: தீபாவளியை முன்னிட்டு, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், திண்டல் வேலாயுதசுவாமி கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், முனிசிபல் காலனி சக்தி வினாயகர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும், அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. பண்ணாரி மாரியம்மன் கோவிலிலும், பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட கூடுதலாக இருந்தது.