பரமக்குடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நாளை சஷ்டி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2014 02:10
பரமக்குடி : பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை(அக்., 24) துவங்குகிறது. இவ்விழாவை தொடர்ந்து 28 ம் தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு, சுவாமிக்கு விசேஷ அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. அக்., 29 ல், மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதியுலா வந்து, மாலை 4 மணிக்கு சூரசம்ஹார லீலை நடக்கவுள்ளது. மறுநாள் சுப்பிரமணியசாமி, தெய்வானைக்கு காலை 11 முதல் 12 மணிக்குள் திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்குபட்டணப்பிரவேசத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.