பதிவு செய்த நாள்
23
அக்
2014
02:10
நாமக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், நேற்று, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அதிகாலை சூரிய வழிபாடு செய்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அந்தந்த பகுதி மக்கள், அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். அதில், நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் தாயார் சன்னதி, அரங்கநாதர் சன்னதி, பலப்பட்டரை மாரியம்மன் கோவில், ஐயப்பன் கோவில், கூலிப்பட்டி முருகன் கோவில், பாலதண்டாயுதபாணி கோவில், ராசிபுரம் பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.