திண்டிவனம்: திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் கேதார கவுரி நோன்பு விழா நடந்தது. ஐப்பசி மாதத்தில் கொண்டாட ப்படும் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து மறுநாள் அமாவாசை திதியன்று கேதார கவுரி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. கேதார கவுரியம்மன் சிற ப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். குடும்ப பெண்கள் விரதமிருந்து குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து, அதிரசம் அல்லது வாழைப்பழம் மூலம் நைவேத்யம் செய்து, நோன்பு கயிறு அணிந்து வழிபட்டனர். பூஜைகளை ராதாகுருக்கள், பாலாஜி, கணேசன், முகேஷ் குருக்கள் குழுவினர் செயதனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையில் பல ஆயிரம் மக்கள் பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டனர்.