செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் அமாவாசையை முன்னிட்டு தில ஹோமம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அ ருகே உள்ள செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவசையை முன்னிட்டு தில ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து, தில ஹோமம் நடந்தது. இரவு 8 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கல நீர் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா புஷ்பாஞ்சலியும், சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். இதில் அறங்காவலர் கன்னியப்பன், விழா குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.