Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை மாரியம்மன் ... பாகூர் மூலநாதர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2014
01:10

ஆனைமலை:தீபாவளியை தொடர்ந்து வந்த அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை சிறப்பு பூஜையில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள், முந்தைய நாள் இரவே கோவிலில் தங்குகின்றனர். இம்மாத அமாவாசை, தீபாவளியை ஒட்டி வந்ததால் இரவே வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். பக்தர்கள் நலன் கருதி, விடிய, விடிய நடை திறந்து இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலையில் ஆனைமலை உப்பாறு மற்றும் ஆழியாற்றில் புனித நீராடிய பக்தர்கள், பயபக்தியுடன் அமாவாசையன்று நடைபெறும் முதல் கால பூஜையில் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த உச்சிகாலை பூஜை, சாயரட்சை, தங்கமலர் அர்ச்சனை உள்ளிட்ட அனைத்து பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும், கோவை, திருப்பூர், பழநி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் வந்த பக்தர்களின் வசதிக்காக 50-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் விடிய, விடிய இயக்கப்பட்டன. பக்தர்களின் வாகனங்கள் அதிகரிப்பினால் சேத்துமடை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வால்பாறை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் அனிதா, புலவர் லோகநாதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
அவிநாசி: ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை ... மேலும்
 
temple news
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்ற மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar