கீழக்கரை :பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது. அக்., 1 ல் கொடியேற்றப்பட்டது. நேற்று மாலை 5.30 மணியளவில் உலகநன்மைக்கான துஆ ஓதப்பட்டது. பின் புகழ்மாலை எனும் மவுலீது ஓதி கொடியிறக்கம் செய்யப்பட்டு நெய்சோறு வழங்கப்பட்டது. இதில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகத்தலைவர் சதக்கு, செயலாளர் அபிபுல்லா, விழா அமைப்பாளர் அப்துல்மஜீது, இணைத்தலைவர் சிராஜுதீன், துணைத்தலைவர் சுல்தான், செய்யதுஇப்ராம்ஷா, சுல்தானியா சங்கத்தலைவர் சாகுல்ஹமீது, தொழிலதிபர் சிங்கம்பசீர், ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கபீர் பங்கேற்றனர்.