பரமக்குடி: பரமக்குடி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வராள் கோயிலில், திருவாசக முற்றோதல் விழா நடந்தது. திருவாசக சித்தர், திருக்கழுக்குன்றம் சிவத்திரு தாமோதரன், திருவாசகக்கனி பழனிராஜம்மாள் தலைமையில் பல்வேறு சிவத்தலங்களில் இருந்து வந்திருந்த, நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.காலை 6 மணிக்கு கோயிலில் இருந்து முக்கிய வீதி களில், திருவானைக்கா அடியார் கூட்டத்தினரின் கயிலை வாத்தியம் முழங்க, மாணிக்கவாசகர் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 7.30 மணி முதல் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சிவனடியார்கள் பொதுமக்கள் நாள் முழுவதும் திருவாசகத்தை பாடினர். ஏற்பாடுகளை ஆயிரவைசிய சபை, மீனாட்சி சுந்தரேஸ்வராள், முத்தாலம்மன் கோயில் தேவஸ்தானம் மற்றும் திருவாசக முற்றோதல் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.