திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிவர் மங்களாசாசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2014 12:10
கீழக்கரை : திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் சமேத பத்மாசனித்தாயார் சன்னதியில்,அக்., 26, முதல் 28 வரை மணவாள மாமுனிவருக்கு உற்சவ விழா நடந்தது. நாலாயிர திவ்யபிரபந்தப்பாடல்கள், வேதபாராயணங்கள் முழங்க 3 நாட்களிலும் ஹோமங்களுடன் பூர்ணாகுதி சிறப்பு பூஜைகள் மற்றும் திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. ஆதிஜெகந்நாதப்பெருமாள், பத்மாசனித்தாயார், பட்டாபிஷேக ராமர், அனந்தசயனப் பெருமாள் உள்ளிட்ட மூலவர்களின் சன்னதிகளின் முன் தீபாராதனை நடந்தது. அதன்பின், உற்சவர் அலங்காரத்துடன் மணவாள மாமுனிவரின் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், மாலை 6:00 மணியளவில் வீதியுலா நடந்தபோது, ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சமஸ்தான தேவஸ்தானம் திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் செய்திருந்தனர்.