பதிவு செய்த நாள்
30
அக்
2014
12:10
ஆர்.கே.பேட்டை: சஷ்டி விரதம் மேற்கொண்டுள்ள பெண்கள், சுப்ரமணிய சுவாமி கோவிலில், 1,008 குத்துவிளக்கு தீபமேற்றி பூஜை நடத்தினர். கந்த சஷ்டி உற்சவத்தை ஒட்டி, வங்கனுார், அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் மேற்கொண்டு வருகின்றனர். அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று முன்தினம், 1,008 குத்துவிளக்கு பூ ஜை நடந்தது. சஷ்டியை ஒட்டி, கோவில் வளாகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை முதல், இன்று மாலை வரை, கந்த புராணம் தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. காலையில் லட்சார்ச்சனையும், மாலையில் உற்சவர் மலர் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். நேற்று முன்தினம், மாலை, கோவில் முன் மண்டபத்தில், 1,008 குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில், விரதம் மேற்கொண்டுள்ள பெண்கள் கலந்து கொண்டு தீபமேற்றி, குங்கும அர்ச்சனை நடத்தினர்.