பதிவு செய்த நாள்
30
அக்
2014
02:10
திருப்பூர் : ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி நாளில், கஜமுகாசுரன், பத்மாசுரன், சிங்கமுகாசுரன் மற்றும் பானுகோபன் ஆகிய நான்கு அசுரன்களை, முருக பெருமான் வதம் செய்யும் சூரசம் ஹார நிகழ்ச்சி, முருகன் கோவில்களில் நடைபெறுவது வழக்கம்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன் மலை கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹார விழா, கடந்த 24ம் தேதி துவங்கி யது. பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் துவங்கினர். மலையில் இருந்து சுவாமி அடிவாரத்துக்கு எழுந்தருளி னார். தினமும் சிறப்பு பூஜை, திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வான, சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதன்பின், சுவாமிக்கு சிறப்பு அபி ஷேகம், திருசதை அர்ச்சனை, வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தன. தொடர்ந்து சுவாமி பாசறைக்கு எழுந்தருளினார். உச்சிகால பூஜை, சாயரட்சையை தொடர்ந்து, வீரபாகுடன் சுவாமி தேரில் எழுந்தருளினார்.கிழக்கு ராஜவீதியில் கஜமுகாசுர னாக வந்த சூரபத்மனை ஆக்ரோஷத்து டன் வேலால் தலையை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின், தெற்கு ரத வீதியில் சிங்கமுகாசுரனையும், மேற்கு வீதியில் பானுகோபனையும், வடக்கு ராஜவீதியில் சூரபத்மனையும் வதம் செய்தார். அதன்பின், ஈஸ்வரன் கோவிலில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதேபோல், திருப்பூர் கொங்கண கிரி கந்தபெருமான் கோவிலிலும், திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர் சன்னதி யிலும் சூரசம்ஹார விழா நடந்தது. முருகன் தேரில் எழுந்தருளி, தேரோ டும் வீதிகளில் பல்வேறு ரூபங்களில் வந்த சூரபத்மனை வதம் செய்தார். சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் வீதி உலா இன்று நடக்கிறது.
* அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற அவ்விழா வில், நான்கு வீதிகளிலும் சூரன்களை வதம் செய்து, முருக பெருமான் வீரபாகுவுடன் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். சஷ்டி விரதம் இருந்த பக்தர் கள், சூரசம்ஹாரம் முடிந்ததும் தங் களின் விரதத்தை முடித்துக் கொண்ட னார். முன்னதாக, சுப்ரமண்ய மூர்த் திக்கு மஹாபிஷேக, அலங்கார வழி பாடுகள் நடைபெற்றன. அதன்பின், தெய்வானையை முருகன் திருமணம் செய்து கொள்ளும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
* திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், நேற்றிரவு சூரசம் ஹாரம் நடைபெற்றது. கோவில் வளா கம் முன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, வீர பாகு துணையுடன், முருகன், சூரர் களை வதம் செய்தார். கூடியிருந்த பக் தர்கள், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். இதன்பின், முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்க, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இன்று காலை, திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
* பொங்கலூர், அலகுமலை முருகன் கோவிலில், கடந்த 24ல் கொடி யேற்றத்துடன், கந்தர் சஷ்டி திருவிழா துவங்கியது. இதைத்தொடர்ந்து விநாய கர் பூஜை, கந்தர் சஷ்டி பாராயணம், சொற்பொழிவு, மகா தீபாராதனை, கூட்டு பிரார்த்தனை உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. சூரசம்ஹாரம், நேற்று நடைபெற்றது. மாலை 3.00 மணியளவில் சூரனை வதம் செய்வதற் காக, முருக பெருமான் தனது தாயார் பத்மாவதியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், மாலை 5.00 மணியளவில் சூரசம்ஹாரமும் நடைபெற்றது. பல் வேறு தோற்றங்களில் வந்த சூரனை, முருகன் வதம் செய்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 9.00 மணிக்கு, திருக்கல் யாண வைபவம் நடைபெறுகிறது.