பதிவு செய்த நாள்
03
நவ
2014
11:11
புதுச்சேரி: பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில், நேற்று சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை பஞ்சவடீயில், 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மாதம் தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று சிறப்பு பால் அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை 4:30 மணிக்கு பால், பன்னீர், மஞ்சள் மற்றும் வாசனை மங்கள திரவியங்களால், ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன் மற்றும் அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரி சுந்தரவரதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.