திருக்கோவிலூர் கோவிலில் தேர் ‘ஷெட்’ அமைக்கும் பணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2014 12:11
திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் தேர் நிலைக்கான கூரை அமைக்கும் பணி துவங்கியது. திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பழமையான தேர் சிதிலமடைந்ததால் பல ஆண்டுகளாக தேர் இன்றி சகடையில் பிரம்மோற்சவ காலங்களில் சுவாமி வலம் வந்தது. இப்பிரச்னையை தீர்க்க மலேசியாவில் வசிக்கும், திருக்கோவிலூரை சேர்ந்த தொழில் அதிபர் உதவியுடன் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடந்து வந்தது. இதற்க ஷெட் அமைக்கப்படாததால் தேர், மழை, வெய்யி ல்களால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்களின் தீவிர முயற்சியால் ஷெட் அமைக்கும் பணி துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது.